Athikaalaiyil Vzhitezhumbi – அதிகாலையில் விழிதெழும்பி
அதிகாலையில் விழிதெழும்பி
மகிபன் இயெசுவைப் போற்றுவோம்
ஆவியில் உற்சாகமாக அன்பார் பாதம் வணங்கியே
ஆத்தும நல்லநேசரையே புகழ்ந்து போற்றுவோம்
காலைதோறும் புதியதான கிருபை இன்றும் பெற்றிட
கலித்துமே இம் மேதினியில் ஜீவ பாதை ஓடிட
காட்சியாய் மிக மாட்சியாய்
நாம் துதித்து போற்றுவோம்
மரியாளைப்போல் உள்ளம் கனிந்து அதிகாலையில் தேடினால்
பிரியமாக காட்சி தந்து அகமகிழ செய்வாரே
புகழ்ந்துமே அகமகிழ்ந்துமே
எம் நேசர் என்போமே
கண்டிடுவோம் காலைதனில் கருத்துடனே தேடினால்
கண்டனரே காலையில் எம் முன்னோர்களும் தேடியே
மகிழ்ந்தனர் அவர் புகழ்ந்தனர்
பரன் பாதம் பணிந்தனர்
வழி இதுவே, நடவும் இதில்; எனவே அன்பார் பேசிடும்
இன்பமான வாக்கை கேட்டு இன்பக் கானான் செல்லவே
விழித்துமே உள்ளம் மகிழ்ந்துமே
யாம் துதித்து போற்றுவோம்
தூதர்களும் கேருபீன்களும் சேராபீன்களும் சேர்ந்துமே
தூயர், தூயர், தூயர், என்று துதித்து புகழ்ந்து எத்தியே
தூயரை நல் நேயமாக
பணிந்து நிற்கவே
துதித்திடுவோம் நேசரையே துதித்தல் இன்பமானதால்
துதியில் அவர் வாசம் செய்து துதியில் பிரியம் கொள்ளவே
ஸ்தோத்திர நற்பாத்திரை
துதித்து போற்றுவோம்
அதிகாலையில் இந்த பாமாலையை பாடிட அந்த நாளுக்கு தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும் தேவன் நல்குவார்
ReplyDelete