Arunothayam Ezhunthiduvom - அருணோதயம் எழுந்திடுவோம்
பரண் இயேசுவை துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரணோடுறவாடவும்
இதை போன்றொரு அருணோதயம்
எமை சந்திக்கும் மனமே
ஆ என் ஆனந்தம் ஜோதி சூரியனாம்
எந்தன் நேசர் எழும்பும் நாள்
நன்றியால் உள்ளம் பூரித்திடுதே
அன்னையாம் இயேசு காருண்யம்
ஒவ்வொன்றாய் இதை தியானம் செய்யவும்
எவ்வாறும் ஏற்ற சந்தர்ப்பம்
போன இராவினில் ஜீவித்தோர் பலர்
பூமி விட்டுமே போய் விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரை துதிப்போம்
நான் நிர்வாணியாய் வந்த வண்ணமே
நிவாணியாய் போகின்றேன்
கூட செல்லவும் பூவில் ஒன்றுண்டோ
நாடிப்போம் அந்த நாட்டிற்கே
ஆ என் நேசரின் அன்பை எண்ணவும்
ஆனந்தம் பராமணந்தம்
ஆ என் நேசர் ஊர் நவ வான் புவி
தானம் செய்ததே ஆனந்தம்
பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யார் இவள் கானகந்தனில் ?
எந்தன் நேசரின் கூட செல்கின்றேன்
சொந்த இராஜ்யத்தில் சேரவும்
கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்
ஆசையோடு நான் வாரேன் என் துக்கம்
பாசமாய் அங்கு தீர்த்திடும்
No comments:
Post a Comment