En Aathumave - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி


En Aathumave - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை என்றும் ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை என்றும் மறவாதே

ராஜாதி ராஜாவே என்றுமே
கர்த்தாதி கர்த்தாவே என்றுமே
ராஜாதி ராஜாவே என்றுமே
அல்லேலூயா ஆமென் – 2

என் அக்கிரமங்களை மன்னித்தார்
உன் நோய்களை குணமாக்கினார்
உந்தன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார்
உன்னை கிருபை இரக்கத்தால் முடி சூட்டினாரே
அவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் – 2

என் வாயை நன்மையினால் கர்த்தர் திருப்தியாக்குகிறார்
உன் வயது கழுகுக்கு சமானமாய்
திரும்ப வால வயது போல் ஆகும்
அவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

ஒடுக்கப்படும் யாவருக்கும் நீதி நியாயத்தை செய்கின்றாரே
உருக்கம் இரக்கம் கிருபை மிகுந்த
தேவன் நீடிய சாந்தம் நிறைந்த பிதாவே
அவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் – 2

அவர் எப்போதும கடிந்து கொள்ளார்
தேவன் என்றைக்கும் கோபம் கொண்டிரார்
நம் பாவங்களுக்கு தக்கதாய் செய்யாமலும்
சரிக்கட்டாமலும் அவர் இருக்கின்றதாலே
அவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் – 2

தகப்பன் தன் பிள்ளைகட்கு இரங்குவது போல் அவரும்
தமக்கு பயந்தோருக்கு இரங்குகின்றார்
கர்த்தர் கிருபை நீதி எமக்களித்தார்
அவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் – 2

No comments:

Post a Comment