Aarparithenrum - ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே


Aarparithenrum - ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே

ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே
ஆனந்தமாய் பாடுவேன் 
ஆண்டவர் அடியார்க்கருளிய அளவில்லா 
ஆசிகளை நினைந்தே 

நான் புகழ்ந்திடுவேன், அவர் நாமத்தையே 
என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன் 
ஒப்பில்லாத நேசரின் திரு நாமம் அரணே 
எப்போதும் தாங்கும் புகலிடமே 

கண்மணி போல, கடந்த நாட்களிலே 
கருத்தாய் பாதுகாத்தனரே 
காற்றையும் கடலையும் கடந்து நான் சென்றிட 
கிருபை ஈந்ததினால் 

பலவித நாசம், பயங்கர மோசம்
பலமாய் சோதனை சூழ்கையில் 
பரிசுத்தமாக இப்பாதையில் ஓடிட 
பரண் இயேசு செய்ததினால் 

திகையாதே நான் உன் தேவன் ஏன்றுரைத்தே 
திருவாய் மலர்ந்தென்னை தேற்றினார் 
திசையறியாது தியங்கையில் பாதையில் 
தீபம் என் இயேசு தானே 

அன்பரின் இன்ப நாமத்தை புகழ 
ஆயிரம் நாவுகள் போதுமோ ?
ஆதியும் அந்தமும் ஆச்சரியமே இவர் 
நீதியின் சூரியனே 

No comments:

Post a Comment