Kartharaam Yesuvai - கர்த்தாராம் இயேசுவை
கர்த்தாராம் இயேசுவை துதிப்போம்
கரம் குவித்தவரை இன்றென்றுமே
சென்ற நாட்களிலெல்லாம் சீர் கரத்தாலே
சேர்த்தவர் கண்மணிபோல் அணைத்தாரே
திருப்பாத மலர் என்றும் துதித்திடுவோம்
சோதனையால் உள்ளம் சோர்ந்திட்ட வேளையில்
சொறிந்தனரே பெலன் கிருபையில் நிலைக்க
தூயனை துதித்தென்றும் வாழ்த்திடுவோம்
பாதையில் பாடுகள் பல்கிய நேரத்தில்
ஆதரித்தார் அவர் வார்த்தையின் பெலத்தால்
சிநேகத்தின் ஆழத்தை நினைத்திடுவோம்
பாரங்களால் உள்ளம் பதைத்திட்ட வேளையில்
தாயினும் மேல் அவர் ஆறுதல் அளித்தார்
தந்திடுவோம் துதி என்றென்றுமே
தேற்றுவார் இன்றியே தியங்கின வேளையில்
ஆற்றினாரே அன்பின் தூதுகள் அளித்தே
அண்ணலை துதித்து நாம் பாடிடுவோம்
நான் உனக்காய் யுத்தம் செய்திடுவேன் என்று
நவின்றவர் எந்தன் கரம் பிடித்தாரே
நாதனை என்றும் நாம் துதித்திடுவோம்
No comments:
Post a Comment