En Mellulla - என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக


En Mellulla - என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக

என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக நான் 
என்ன செய்வேன் உமக்கென் இயேசுபரா ? - இப்போ 

நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே 
இன்று வரையும் என்னை காத்ததாலே - தேவா 

பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க 
சாப சிட்சை சகித்த தேவ சுதா - மகா 

என்னை அனுதினம் அன்போடு நடத்திடும் 
பொன் இயேசுவே ! அனந்தம்  ஸ்தோத்திரமே ! - எந்தன் 

முற்றுமுடிய என்னை காத்து நடத்திட 
சத்துவம் ஈந்திடும் நல் நண்பன் நீரே - திரு

தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய் 
பாதம் வேண்டியே நிற்கும் பாக்கியனே - பொன்னின் 

குற்றம் குறைகள் இன்றி கோதில்லா ஜோதியில் 
முற்றும் என்னை நிறுத்த வல்லவரே - தேவா 

இந்நிலன் தன்னில் ஏழை தங்கிடும் நாளெல்லாம் 
ஏத்துவேனே உம் திரு நாமமதை - ஏழை

No comments:

Post a Comment