Aathumame En Ullame - ஆத்துமமே என் உள்ளமே


Aathumame En Ullame - ஆத்துமமே என் உள்ளமே 

ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த உபகாரங்களை
என்றென்றும் நீ மறவாதே

பாவங்களை மன்னித்தாரே
நோய்களையும் குணமாக்கினாரே
பிராணனையும் பாதுகாத்து
கிருபையினால் முடிசூட்டினார்

நன்மையினால் உன் வாயை
நிறைத்தே ஆசீர் பொழிந்திடுவார்
கழுகினைபோல் வயதினையும்
மாற்றிடுவார் வாலிபமாய்

உறக்கமும் இரக்கமும்
நீடிய சாந்தமும் உள்ள கர்த்தர்
பாவங்கட்கு தக்கதாக
தண்டியாமல் இறங்குகின்றார்

கர்த்தரது கிருபையும்
பயந்து நடப்போர் மேலுள்ளது
பிள்ளைகளின் பிள்ளைகள் மேல்
அநாதியாக நிலைநிற்குமே

கர்த்தரது ராஜரீகம்
வான் புவியாவையும் ஆளுவதால்
தூதர்கள் சர்வ சேனையுடன்
ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பாய் 

No comments:

Post a Comment